யாழ்ப்பாணத்தில் மின் கம்பி இணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மின் கம்பி இணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்.வண்ணார்பண்ணை - பத்திரகாளி கோயில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - பூநாரிமடம் பகுதியில் கடை வேலை ஒன்று நடைபெற்று வந்தது.
அங்கு முதலாவது மாடியில் மேற்படி நபர் மின் கம்பி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை தவறுதாலாக கீழே வீழ்ந்துள்ளார்.
இதன்போது அவருடன் வேலை செய்தவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
