சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் புதிய விகாரைகளுக்கான அடிக்கற்களாகும் திருமலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவிப்பு.

4 months ago


சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் புதிய விகாரைகளுக்கான அடிக்கற்களாகும் திருமலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவிப்பு.

சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் வடக்கு - கிழக்கில் புதிய விகாரைகளை நிறுவுவதற்கான அடிக்கற்களாகும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று தமிழ் பொதுவேட்பாளர் பா. அரிய நேத்திரன் தெரிவித்திருக்கின்றார்.

திருகோணமலை பூநகர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் பிரச்சாரத்தின் கீழ், பா. அரியநேத்திரன் திரு கோணமலையில் இரு நாள் பிரசார நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தார்.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு மக்கள் சந்திப்புகள் திருகோணமலையில் நடைபெற்றிருந்தது. இரு நாள் பிரசார நடவடிக்கைகளின் இறுதி மக்கள் சந்திப்பு, அரசியல் ஆய்வாளர் யதீந்திராவின் தலைமை யில், திருகோண பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது, தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுவின் முடிவு தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதன்போதே அரியநேத்திரன் சஜித் பிரேமதாஸவின் கடந்த கால நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியிருந்தார். தீவிர பௌத்தவாதியான பிரேமதாஸ வடக்கு கிழக்கில் ஆயிரத்து நூறு விகாரைகளை கட்டும் திட்டத்தை கொண்டு வந்த ஒருவர். அந்தத் திட்டத்தின் அடிப் படையில்தான் திருகோணமலையின் பல பகுதிகளில் விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டன என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது - என்றும் அரியநேத்திரன் குறிப்பிட்டார். 


அண்மைய பதிவுகள்