கெஹலிய ரம்புக் வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
மேல் மாகாண மேல் நீதிமன்றம் பத்திரிகை விளம்பரம் மூலம் வங்கிக் கணக்குகள் ஏனைய சொத்துக்கள் உட்பட முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 18 வங்கி கணக்குகள், 5 ஆயுள் காப்புறுதிகள் ஆகியவற்றை செயல் இழக்கச் செய்துள்ளதுடன்
கொழும்பு ஐந்தில் தொடர்மாடியொன்றையும், மேர்சிடெஸ் பென்ஸ் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளது என நீதிமன்ற விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி கணக்குகளும் சொத்துக்களும் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தவர்களிற்கு சொந்தமானவை.
மேலும், டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 2025 ஜனவரி 3 ஆம் திகதி வரை இந்த சொத்துக்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்கி வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
