யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக 6.2 கோடி அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

5 months ago


யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக 6.2 கோடி அமெரிக்க டொலர்களை (நம் நாட்டு மதிப்பில் சுமார் 1873 கோடி ரூபாய்) மானியமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் குறித்த துறைமுகத்தை 30 வருடங்களுக்கு செயல்படுத்த இந்தியா முயற்சிக் கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், காங்கேசன்துறை துறைமுக திட்டத்தை நிறைவேற்று வதற்கு இந்திய அரசாங்கம் கடன் வழங்கதிட்டமிட்டது. எனினும், தற் போதைய பொருளாதார நிலையால் இலங்கையில் திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியா தனது கவனத்தை மாற்றியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியாவின் மானிய உதவியின் கீழ் குறித்த துறைமுக அபிவிருத்திக்கான முன்மொழிவுக்கு இலங்கை அண்மையில் அனுமதி வழங்கியது. ஆரம்பகால முன்மொழிவுகளின்படி ஓர் இந்திய கட்டமைப்பாளர் ஒருவர் குறித்த திட்டத்தை நிறைவேற்றுவார் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி. எஸ். ருவன்சந்திரா தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், இந்தியா 30 ஆண்டுகளுக்கு அதன் வணிகச் செயல்பாடுகளை முன்னெடுக்க முயன்றதாகக் குறிப்பிட்டார். ”எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.