யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிகை ஏழிலிருந்து ஆறாகக் குறைந்துள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிகை ஏழிலிருந்து ஆறாகக் குறைந்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
இதன்படி, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 ஆக உள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் திருகோணமலையில் 4பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பில் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்திலிருந்து 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவாவர்.
அத்துடன், அதிகூடிய கம்பஹா மாவட்டத்திலிருந்து அதிகூடுதலாக 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் அதேநேரம் திருகோணமலை மாவட்டத்திலிருந்து அதிகுறைவாக 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.