யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

3 weeks ago



யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (13.12.2024) மீன்பிடி, நீர்வாழ் உயிரின மற்றும் கடல் வள அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ். மாவட்டச் செயலகத்தில் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். 

இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.இளங்குமரன், இ.அருச்சுனா, ச.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் ஆகியோரும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும், திணைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டனர். 



அண்மைய பதிவுகள்