திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்தி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவத்தில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியில் உள்ள சம்பரசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் உறவினர்களுடன் மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துள்ளனர்.
இதனையடுத்து தனி அறையில் புதுமண தம்பதி இருவர் மட்டும் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது.
பின்னர் ஒருவரையொருவர் கத்தியால் குத்தியுள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லிகிதா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் ஜாலப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவரும் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஆண்டர்சன்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.