உயிர் அச்சுறுத்தலுக்கான பதிலை வாக்களிப்பில் வெளிப்படுத்துங்கள், மக்கள் தான் எனது பாதுகாப்பு என அரியநேத்திரன் தெரிவிப்பு.
உயிர் அச்சுறுத்தலுக்கான பதிலை வாக்களிப்பில் வெளிப்படுத்துங்கள், மக்கள் தான் எனது பாதுகாப்பு என தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
அத்துடன், வேட்பாளர்களில் எனக்கு மாத்திரம் இந்த அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸாரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை மக்கள் சிந்தித்து வாக்களிப்பு மூலம் அதற்கான பதிலை வழங்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களில் தனக்கு மாத்திரம் ஏன் அச்சுறுத்தல் கடிதம் வரவேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் இதற்கான பதிலை மக்கள் வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித் தார்.
தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனின் உயிருக்கு ஏதேனும், அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என பிரதிப்
பொலிஸ் மா அதிபரால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்ட நிலையில் குறித்த கடிதம் தொடர்பில் தெளிவுபடுத் துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.