யாழ்.தீவக கடற்றொழில் அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய இலுவைப் விசைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை தடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

1 month ago



தீவக கடற்றொழில் அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய இலுவைப் விசைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை தடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 09.45 மணியளவில் யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பமாகியது.

இதில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை கண்டித்து இலங்கை அரசே பதில் கூறு,எமது வாழ்வாதார பாதிப்புக்கு யார் காரணம்,இலங்கை கடல்வளத்தினை பாதுகாத்து எமது மீனவர்களின் வாழ்க்கையினை பாதுகாக்க வழி செய்,இந்திய இலுவைப் படகுக்கு என்ன சட்டம் உள்ளது.என்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் 300 மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய இலுவை விசைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை தடுக்ககோரி 18 அம்ச அடங்கிய கோவையும் ஒன்று யாழ் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.சுதாகரிடம் குருநகர் கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் யூலியன் சகாயநாதன் தலைமையிலான தீவக கடற்றொழில் அமைப்பின் உள்ளிட்ட குழுவினர்கள் மகஜரினை கையளித்தனர்.

இந்த கண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் பண்ணை கடற்கரையோரமாக ஆரம்பமாகி பண்ணை சந்தை ஊடாக,யாழ் தபால் நிலையம் ஊடாக சென்று கண்டி பிரதான வீதியூடாக சென்று வடமாகாண ஆளுநர் செயலகம் வரை சென்று நிறைவடைந்தன.

பின்னர் மகஜரும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன் யாழ் கோவில் வீதியில் உள்ள இந்திய துணைத்தூதுவர் சென்று தூதுவர் அலுவலகரிடம் கையளிக்கப்பட்டன.

அண்மைய பதிவுகள்