இலங்கையில் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதில் உள்ள சட்ட சவால்களைத் தீர்க்க சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை

1 week ago



இலங்கையில் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சட்ட சவால்களைத் தீர்ப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை நடவடிக்கை முன்னெடுப்பு

மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விடயத்தில் நிர்ணய விலைகள் விடயங்களில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய  ஏற்பாடுகள் போதாமையின் காரணமாகவே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

எவ்வாறாயினும் புதிய சட்டமொன்றை இயற்றுவதா, இல்லை தற்போதுள்ள ஏற்பாடுகளை திருத்தியமைத்து முன்னெடுப்பதா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்