இந்திய மீனவர்கள் இலங்கைக்ள் அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்கவும் - யாழ். மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவிப்பு

6 months ago

எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவில் மீன்பிடி தடைக்காலம் முடிவடையவுள்ள நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோசமாக தொழில் மேற்கொள்ள கூடியதாக இருந்தது.

எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீன் பிடி தடைக் காலம் முடிவடையவுள்ள நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய பிரதமராக மோடி தெரிவானமைக்கு கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டும்.

எதிர்வரும் 15ஆம் திகதி மீன்பிடி தடைக் காலம் முடிந்து இந்திய இழுவை மடி படகுகள் எமது எல்லைக்குள் வராது தடுக்க இலங்கை அரசு கடற்படை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம், கடற்றொழில் அமைச்சு, கடற்படை இதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.