கடவுச்சீட்டு பெறுவதில் நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை- எம்பி விஜித ஹேரத் தெரிவிப்பு.
7 months ago

தற்போது நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள நெருக்கடி காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள தாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையான புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பெறுவதிலுள்ள நெருக்கடி காரணமாக இவர்களால் தமது கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க முடியாமல் உள்ளது. அரசாங்கம் திட்டமிட்டு இதனைச் செய்கிறதா என சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
