யாழ்.வட்டுக்கோட்டை சுழிபுரம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்தார்
1 month ago
யாழ்.வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் வியாழக்கிழமை (5) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு மாணவர்கள் வியாழக்கிழமை (05) வகுப்பிற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
இதன்போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.