முல்லைத்தீவு, மாமூலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு


முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போது மாமூலைப் பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றி ஆரம்பமான இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில், மாமூலை கிராமத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அந்த வகையில் மாமூலைக் கிராமத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், உள்ளக வீதிகளைச் சீரமைத்தல், கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடச் சீரமைப்பு, விளையாட்டு மைதானத்துக்கு மதில் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்களால் முன்வைக்கப்பட்டன.
கிராம மக்கள் சார்பாக குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பிலும், கிராமத்திலுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பிலும் தம்மால் கவனஞ் செலுத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த மக்கள் சந்திப்பில் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
