வடமாகாணத்தில் சுண்ணக்கல் அகழ்வு அனுமதியை நிறுத்துமாறு இலங்கைப் புவிச்சரிதவியல் திணைக்களத்துக்கு ஆளுநர் உத்தரவு
1 day ago
வடக்கு மாகாணத்தில் சுண்ணக்கல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை உடன் நிறுத்துமாறு இலங்கைப் புவிச் சரிதவியல் திணைக்களத்துக்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவிட்டுள்ளார்.
சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் அண்மைய நாள்களாக நிலவும் முறைகேடுகள் தொடர்பில் திணைக்கள ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்று வினவியபோது,
'சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது' என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் குழுவொன்று அமைக்கப்பட்டுத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.