
கனடாவில் வீடுகளின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த தகவல்களை கனடிய வீட்டு மனை ஒன்றியம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வீடுகளின் விற்பனையானது கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வீடுகளின் விற்பனை ஜனவரி மாதத்தில் 2.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
வரி விதிப்பு வட்டி வீதம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வீடுகளின் விற்பனை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் வீடுகள் விற்பனை தொடர்பான பட்டியலுக்கு சேர்க்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 11 வீதத்தினால் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
