அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டடங்களை தேர்தல் காலத்தில் எவருக்கும் வழங்குவதை தவிர்க்கவும். தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.
7 months ago

அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான சுற்றுலா இல்லங்கள், விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகளை தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் அல்லது வேறு எவருக்கும் வழங்குவதைத் தவிர்க்குமாறு அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு சிறப்பு அறிவிப்பு விடுத்துள்ளது.
அவ்வாறான இடங்களில் தங்கியுள்ளவர்கள் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பர சுவரொட்டிகள், கட் அவுட்களை அரசு கட்டடங்கள் மற்றும் அவற்றின் வளாகங்களில் காட்சிப்படுத்தவோ அல்லது சேமிக் கவோ அனுமதிக்கக்கூடாது. அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகள் விடுப்பு எடுக்கவோ அல்லது அரசியல் நடவடிக் கைகளில் ஈடுபடவோ கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
