9 இலட்சம் ரூபாவும், 3 தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளன என்று ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு
5 months ago

கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது தமது 9 இலட்சம் ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளன என்று ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி மாலை 4 மணியளவில் இரு பெண்களுடன் ஹோட்டலுக்குத் தான் வந்தார் எனவும், 21 ஆம் திகதி காலை அறைக்குள் யாரோ நுழைந்து இந்தத் திருட்டைச் செய்துள்ளனர் எனவும் தனது முறைப்பாட்டில் மேற்படி பெண் தெரிவித்துள்ளார்.
தனது சுகாதார அட்டை மற்றும் இரண்டு கிரெடிட் கார்டுகளும் திருடப்பட்டுள்ளன என்றும் அந்தப் பெண் கூறினார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ் தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
