புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு உட்பட 10 அம்சங்களுடன் ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம்
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைக் காணுதல் உட்பட பத்து அம்சங்களை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ஜயசூரிய கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
மக்கள் வழங்கிய ஆணையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்பதோடு நாட்டில் தேசிய ஒற்றுமை, சாந்தி, சமாதானத்தினை நிலைபெறச்செய்து சுபீட்சமான நாட்டில் அனைவரும் அச்சமின்றி இலங்கையர்களாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதனடிப்படையில் பின்வரும் விடயங்களில் அதிகமான கவனத்தினைக் கொள்கின்றேன்.
குறித்த விடயங்கள் வருமாறு-
1. ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசாங்கத்தின் முதற் செயல்பாடாக நாட்டின் ஜனரஞ்சக கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் சட்டத்தை மதிக்கும் திறமையான பொது நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
விசேடமாக இலங்கையில் 14 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
2. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகியவற்றை தாமமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.
3. புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பு தொடர்பில் எட்டாவது பாராளுமன்றம் சிறப்பான பணியைச் செய்துள்ளது.
லால் விஜேநாயக்க மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராக இருந்ததோடு மட்டுமன்றி அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தவராகவும் உள்ளார்.
அந்த வகையில் தற்போதைய தருணத்தில் அந்தச் செயற்பாட்டில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே முடிக்க வேண்டியுள்ளதால் அந்த விடயத்திலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
4. தேசிய இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு. கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது எதிர்காலச் சந்ததியினரை கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
5. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்பதோடு அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுதல் முக்கியமானதாகின்றது.
6. அடுத்துவரும் காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் தேர்தல் முறைமைகள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் பிரியசாத் டெப் கமிஷன் தலைமை யிலான தேர்தல் சட்ட திருத்தத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வெளிப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது.
7. பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களை வலுவாகச் செயற்படுத்தப்படும்.
8. அனைத்து சமூகத்தால் வெறுப்படைந்த கட்சி தாவுகின்ற செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
9. நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இரத்து செய்தல். இந்த விடயத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தின் போது ஜனாதிபதியாகிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இறுதிக்கட்டமாக அமையும் என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது கொள்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
நிறைவேற்று அதிகாரத்தை திடீரென ஒழிக்க முடியாவிட்டாலும், அரசாங்கத்தின் இருப்பை ஒரு குறித்த திகதியை சாதாரண பொதுமக்களுக்கு வாக்குறுதியை வழங்கினால் அது அரசாங்கத்தின் கௌரவத்திற்கும் ஜனாதிபதியின் நற்பெயருக்கும் மேலும் வழிவகுக்கும்.
10. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம். சம்பந்தமான கோவை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 8ஆவது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டு முறைமை தயாரிக்க முடிந்தது.
பிமல் ரத்நாயக்க மிகவும் பெறுமதியான பணியைச் செய்தார். அதன் அடிப்படையில் ஒழுக்கக் கோவையின் சிலவிதிகளை உள்வாங்க முடியும். இல்லையேல் அவற்றை முழுமையாக அமுலாக்க முடியும்.
மேலும், 2015 ஆம் ஆண்டு வரை நிலவிய சர்வாதிகார ஆட்சியை மாற்றுவதற்கு வணக்கத்திற்குரிய மாது லுவே சோபித தேரரின் தலைமையில் சமூகத்திற்கான தேசிய இயக்கம் பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத் திருந்தது.
அந்த வகையில் தற்போதும் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும், அனைவரும் இலங்கையர்களாகவும் வாழ்வதற்காக நாம் எந்தவிதமான அரசியல் இணைந்து செயற்பட்டதை நாம் நினைவுகூருகின்றோம்.
எமக்கு எந்தவொரு அரசியல் நோக்கங்களும் இல்லை என்பதோடு இந்தப் பணியை முன்னெடுப்பது மிகவும் அசியமானது என்றுள்ளது.