இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரின் ஆவணங்கள் மாயம்.-- அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

4 weeks ago



இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரின் ஆவணங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(10) இடம்பெற்றது.

அதன்போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஊடகத்துறையும்            ஊடகவியலாளர்களும் பாதுகாக்க வேண்டும் என்பதில் நிபந்தனைகள் எதுவுமின்றி அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்நிற்கிறோம்.

நாட்டில் கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட          ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை முதல் ஏனைய ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பிலான விசாரணைகள் கடந்த அரங்கங்களினால் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

விசாரணைகளை நடத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டன.

மேலும் சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல      அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சில கொலைகள் தொடர்பிலான ஆவணங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.

ஆனால் எம்முடைய அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்-என்றார்.



அண்மைய பதிவுகள்