செயல்திறனற்ற ஓ. எம்.பி. கலைக்கப்பட வேண்டும்.-- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து

1 month ago



ஏழு வருடங்கள் கடந்தும் ஓர் உண்மையைக் கூட                      கண்டறியப்படவில்லை.

எனவே. செயல்திறனற்ற ஓ. எம்.பி. உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 15 வருடங்களாக எமது        உறவுகளைத் தேடி வருவதுடன்       20. 02. 2017 இலிருந்து தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றோம்.

தொடர்ந்து வந்த அரச தலைமைகளால் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வந்ததால் சர்வதேச நீதியை வலியுறுத்தி    இன்னும் போராடி வருகின்றோம் என்றும் காணாமல்                      ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய ஒ.எம்.பி அலுவலகத்துக்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஒ.எம். பி. சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்      பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ  செவிசாய்க்காது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வாதிகாரத்துடன் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியோ அவர்களின் பங்குபற்றலுடனோ அப்பொறி முறையைச் செயல்படுத்த ல. முனைப்புக் காட்டப்படுவதில்லை.

மாறாக நாங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கும் வெளிப்படைத்தன்மையற்ற நிலையுமே காணப்படுகிறது.

எந்தப் பொறிமுறையும் சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்போ, விருப்போ இல்லாவிட்டால் வெற்றியளிக்காது என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள எவரும் தயாரில்லை.

ஓ. எம். பி. சட்டம் உருவாக்குவதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் கருத்தறிய ஏற்படுத்தப்பட்ட கலந்தாலோசனைச் செயலணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் எவ்வித ஊதியமும் இன்றி ஊர் ஊராகச் சென்று கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்து பரிந்துரைகளை அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் வரை அர்ப்பணிப்புடன்        பணியாற்றியிருந்தோம்.

பரிந்துரைகள் கையளிக்கப்படும் முன்னரே அவசர அவசரமாக வரையப்பட்ட ஓ எம்.பி. சட்டமூலத்தில், எமக்கு உடன்பாடில்லாத விடயங்களைச் சுட்டிக்காட்டி சில திருத்தங்களை செய்யும்படி கேட்டிருந்தோம்.

ஆனால், அதற்குரிய நட வடிக்கை எதுவும் மேற் கொள்ளப்படவில்லை. அது மாத்திரமல்ல கலந்தாலோசனைச் செயலணியால் பரிந்துரைக்கப்பட்டவையில் முக்கியமான பரிந்துரைகள் பல கருத்தில் கொள்ளப்பட வில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எதையும் எடுக்காதது மட்டுமல்லாது, எமது எதிர்ப்பையும் மீறி ஒ.எம்.பி. அலுவலகத்தை திறப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியுடன் இருந்தார்கள்.

அதனால் யாழ்ப்பாணத்தில் அதிகாலை 4.30 மணிக்கும், கிளிநொச்சியில் ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்திலும் அலுவலகத்தைத் திறந்தார்கள்.

30/1 தீர்மானத்தின்படி, மனத்தின்படி, உண்மை, நீதி, இழப்பீடு, மீள நிகழாமை ஆகிய நான்கு தூண்கள் முக்கியமானவை எனக் கூறப்பட்டது.

உண்மையை கண்டறிந்த பின் அவ் விடயம் நீதிப்பொறி முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், ஓ. எம்.பி. ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகின்ற போதும் ஓர் உண்மை கூட கண்டறியப்படவில்லை. 

ஆனால், அதற்குள் நீதியை ஓரங்கட்டிவிட்டு இழப்பீட்டு அலுவலகம் திறக்க வேண்டிய தேவை என்ன?

உண்மையை கண்டறியாமலே பணத்தை கொடுத்து ஏழைகளின் வாயைமூடி, காணாமல்                    ஆக்கப்பட்டவர்களின்            எண்ணிககையை குறைத்துக்  காட்டுவதற்காகவா? என்று அந்த அறிக்கையில் மேலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


ளது

அண்மைய பதிவுகள்