மணற்காட்டில் சவுக்கு மரம் வெட்டிய மூவரை, யாழ்.மாவட்ட வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மணற்காடு சவுக்குமர ஒதுக்கக் காட்டிலிலுள்ள சவுக்குமரம் விறகுப் பயன்பாட்டுக்காக வெட்டப்ப டுவதாக, யாழ்.மாவட்ட வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின ருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைவாக சம்பவ இடத் துக்கு விசேட அதிரடிப் படையின ருடன் விரைந்த திணைக்களத்தினர் ஆறு துவிச்சக்கர வண்டிகளையும், 25000 ரூபா பெறுமதியான வெட்டப்பட்ட சவுக்குமரத்தையும் கைப்பற்றியதோடு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று நபர் களையும் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்து வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
