ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நான் ஜனாதிபதியாக வரப்போவதில்லை. இனவாதம் என்னை ஜனாதிபதியாக விடாது”, என்று பா.அரியநேத்திரன் தெரிவிப்பு.

4 months ago


“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நான் ஜனாதிபதியாக வரப்போவதில்லை. இந்த நாட்டிலுள்ள இனவாதம் என்னை ஜனாதிபதியாக விடாது”, என்று தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மூதூர்-பட்டித்திடலில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த பரப்புரை கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனவாதியும் பெரும்பான்மை இனத் தைச் சேர்ந்த ஒருவருமே இம்முறை ஜனாதிபதியாக வரப்போகின்றார். இதில், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும், அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடுகி றேன்.

கடந்த காலங்களில் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம். இம்முறையும் ஏமாற்றப்படுவதற்கு தயாராக இல்லை. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு எடுத்த முடிவானது ஆரோக்கியமான முடி வென எம்மை சந்திக்கின்ற மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்கத் தயாராகவுள்ளனர்.

இதற்கு முன்னர் பொத்துவில்- பொலிகண்டி போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அவ்வாறே இதுவும் புள்ளடி இடுகின்ற போராட்டமாகும் - என்றார்.



அண்மைய பதிவுகள்