கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
6 months ago

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சி.சி.ரிவி காட்சிகளின் படி, மாணவி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் படி இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு தளத்தில் இருந்து ஒரு ஜோடி காலணிகள் மற்றும் பாடசாலை பை ஒன்றும் காணப்பட்டுள்ளது.
பலியானவர் 18 முதல் 20 வயதுடையவர் என நம்பப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
