இலங்கையில் பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரித்தான 130 இற்கும் மேற்பட்ட குளங்கள் சேதம்

4 months ago



இலங்கையில் பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரித்தான 130 இற்கும் மேற்பட்ட குளங்கள் சேதமடைந்துள்ளன.

வவுனியா மாவட்டத்திலேயே அதிகளவான அணைக்கட்டுகள் சேதமடைந்துள்ளன என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 42 அணைக் கட்டுகள் சேதமடைந்துள்ளதுடன் சேதமடைந்துள்ள குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.