டொரன்டோ நகரில் இடம்பெற்ற வருடாந்த பிறைட் ஊர்வலம், பலஸ்தீன ஆதரவுப்போராட்டக்காரர்களின் இடையீட்டினால் இடைநடுவில் நிறுத்தப்பட்டது.
வருடாந்தம் டொரன்டோவின் டவுன்டவுன் பகுதியில் ஆரம்பித்து நேதன் பிளிப்ஸ் ஸ்குயார் வரை செல்லும் குழுவினரின் இந்த பிறைட் ஊர்வலத் டொரன்டோ நகரில் இடம் பெற்ற வருடாந்த பிறைட் ஊர்வலம், பலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்களின் இடையீட்டினால் இடை நடுவில் நிறுத்தப்பட்டது.
வருடாந்தம் டொரன்டோவின் டவுன்டவுன் பகுதியில் ஆரம்பித்து நேதன் பிளிப்ஸ் ஸ்குயார் வரை செல்லும் குழுவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். கனடாவின் முன்னணி பெரு நிறுவனங்கள், வர்த்தக அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி - பல்கலைக்கழக குழுக்கள் என பெரும் எண்ணிக்கையிலான தரப்புகள் ஊர்வத்தில் கலந்து கொண்டமையுடன். ஆயிரக் கணக்கான மக்களும் வீதியின் இரு மருங்கிலும் கூடி நின்றுஊர்வலத்தை வரவேற்றிருந்தனர்.
இந்த நிலையில், ஊர்வலத்தின் ஓர் அங்கமாக பதிவு செய்து கலந்து கொண்டிருந்த கோலிஸன் எகெயின்ஸ்ட் பிங்க்வோஷிங் என்ற அமைப்பு, வெல் லஸ்லி ரயில் நிலையத்திற்கு அருகில் ஊர்வலத்தின் நடுவே வீதியில் அமர்ந்து, பலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இதனையடுத்து, நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள்
பலனளிக்காமையால், ஊர்வலத்தின் ஒரு பகுதியினர் நேதன் பிளிப்ஸ் ஸ்குயாரை அடைவதற்கு முன்னரே. நிகழ்வை இடைநிறுத்துவதாக ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்தனர்.