மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 150 லீற்றர் கசிப்புடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள், கசிப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன.
மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் சுமார் 150 லீற்றர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.