யாழில் மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார்
2 months ago

யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார்.
சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர் வீதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மங்களநாயகி (வயது 80) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் பிள்ளைகள் வேலைகளுக்கு செல்வதனால் அவர் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் நேற்றிரவு வீட்டுக்கு அருகேயுள்ள வாழைத் தோட்டத்திற்கு சென்று, மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
