தோனிமா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காலம் ஓட..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியீடு.
3 months ago
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தோனிமா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காலம் ஓட..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தோனிமா' எனும் திரைப்படத்தில் காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், விஷாவ் ராஜ், விவேக் பிரசன்னா, ராஜேஷ் ஷர்மா, தயாரிப்பாளர். பி. எல். தேனப்பன், 'கல்கி' ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாக்கியராஜ் & சஜித்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இ ஜே ஜான்சன் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை லேர்ன் & டீச் புரொடக்சன் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் தயாரித்திருக்கிறார்.