இலங்கையில் உள்நாட்டு பொறிமுறை மூலம் பொறுப்புக்கூறலுக்கு தீர்வு காண நடவடிக்கை.-- அரச உயர் வட்டாரங்கள் தெரிவிப்பு.

2 months ago



உள்நாட்டு பொறிமுறை மூலம் பொறுப்புக்கூறலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரச உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, நல்லிணக்க செயல்பாடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நிதி குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கம் மூன்று உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்படவுள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்த உயர்மட்டக் குழுக்களை பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் அமைக்கவுள்ளது.

ஒழுக்காற்று அடிப்படையிலான ஆட்சி, ஊழல், வீண்விரயம் போன்றவற்றுக்கு தீர்வு காணல் போன்ற ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதிகளை

அடிப்படையாகக் கொண்டு இந்த குழுக்களை அரசாங்கம் அமைக்கவுள்ளது.

உள்நாட்டு பொறிமுறை மூலமே பொறுப்புக்கூறலுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ள அரச வட்டாரங்கள் பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவல்ல திறமையான நபர்கள் எங்களிடம் உள்ளனர் என்றும் கூறியுள்ளது.

இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ள பொறுப்புக்கூறல் சம்பவங்களின் எண்ணிக்கையை அறிவதற்கான நடவடிக்கைகளை விசாரணை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர் – என்றும் தெரிவிக்கப்பட்டது.