இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தீர்மானித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
பதவியைத் துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராகத் தொடர்ந்தும் பதவி வகிப்பார் எனவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பாளர் நியமனங்கள் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமையால் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு முடிவெடுத்துள்ளார் என்றும் தெரிய வருகின்றது.