யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம. நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிப்பு

2 months ago



யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் திரு உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்