வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை.

4 months ago


வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

வவுனியா பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் முருகப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்தியோடு வேல் தாங்கி பாதயாத்திரை ஆரம்பமானது.

நேற்று ஆரம்பித்த இந்த பாதை யாத்திரையானது 8 நாட்கள் ஏ - 9 வீதி ஊடாக சென்று அனைத்து கோயில்களையும் தரிசித்து நல்லூர் தேர்த் திருவிழாவான எதிர்வரும் செப். முதலாம் திகதி நல்லூர் கோவிலை சென்றடையும்.