கனடா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்து குறித்து பிரித்தானிய மன்னர் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

2 months ago



கனடா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து குறித்து பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ஸ் இதுவரையில் எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.

கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக உள்வாங்கப் போவதாக ட்ரம்ப் அண்மையில் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீண்டும் வலியுறுத்தி இருந்தார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் கனடாவின் அரச தலைவராக கருதப்படும் மூன்றாம் சால்ஸ் மன்னர் இந்த விவகாரம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.

மன்னரின் நேரடி பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் நாயகம் மேரி சிமோனும் இந்த விவகாரம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இதேவேளை, ட்ரம்பின் கருத்துக்கு பிரித்தானிய அரச குடும்பம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின இந்த அறிவிப்பு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்