பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

1 month ago




ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்துக்கு

பெரும் ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊட கங்கள் உதவியதாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் சமூக ஊடக ஆர்வலர்கள் உரிய      சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக  வேட்டையில் ஈடுபடுவது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் இவ்வளவு பெரிய        ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத்துறையிலிருந்து உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது.

ஆனால் இந்த நேரத்தில் இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி  வேட்டையாடப்படுகிறார்கள்.

நீக்கப்படும் என்று கூறப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை நிறுத்துங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.