கிளிநொச்சியில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது
3 months ago

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53 வயதுடைய கெலன்பிந்துவெவ, வவுனியா, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
