கனடாவின் எரிபொருள் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

2 months ago



கனடாவின் எரிபொருள் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு, வாகனங்கள் போன்ற எதுவுமே தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவுடன் செயல்படுவது மிகுந்த சவால் மிக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் காணொலி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்று உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

எங்களது கார்களை கனடியர்கள் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவை விடவும் உலகில் ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காவிடம் கூடுதல் எண்ணிக்கையில் எரிபொருள்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

25 வீத வரியிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அமெரிக்காவுடன் கனடா இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால் வரி விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்