காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாவது கட்டம் இன்று (25) பிற்பகல் இடம்பெறும் என எதிர்பார்ப்பு




காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாவது கட்டம் இன்று (25) பிற்பகல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் நான்கு பெண் இஸ்ரேலிய இராணுவத்தினர் காசாவிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி பலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்படுவது அந்நாட்டு நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு (இலங்கை நேரப் படி பி.ப. 1.30 மணிக்கு (08:00 GMT) இஸ்ரேலின் ஒபர் (Ofer) சிறையில் இருந்து ஆரம்பிக்குமென பலஸ்தீனில் உள்ள பலஸ்தீனிய கைதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவெளை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரம் மற்றும் அதன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையில் “போர் போன்ற” தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.
ஐந்து நாட்களில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 14 பேரை எட்டியுள்ளது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து காசாவில் நிலவும் குளிரால் குறைந்தது 7 பலஸ்தீனிய குழந்தைகள் இறந்துள்ளதாக பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் போரில் 2023 ஒக்டோபர் 07 முதல் குறைந்தது 47,283 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 111,472 பேர் காயமடைந்துள்ளனர்.
2023 ஒக்டோபர் 07 முதல் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலியர்கள் குறைந்தது 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 200 இற்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
