13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னை விழுங்கி வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

1 month ago



13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரினால்      கைப்பற்றப்பட்டுள்ளது.

Sierra Leone நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணியொருவர்  மேற்படி கொக்கேய்ன் தொகையை விழுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

32 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அவர் விழுங்கியிருந்த கொக்கெய்ன் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.