ஹமாஸ், ஈரான் ஏவிவிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் போர் முடியவில்லை.-- இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு

2 months ago



ஹமாஸ் மற்றும் ஈரான் ஏவிவிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் போர் இன்னும் முடிவடையவில்லை”- என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, "ஈரான் கட்டமைத்த பயங்கரவாத அச்சு சரிகிறது", என்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டமையை சுட்டி நெதன் யாகு கருத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியிலுள்ள இஸ்ரேல், பலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது.

இந்த நிலையில், காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "ஈரான் கட்டமைத்த பயங்கரவாதத்தின் அச்சு சரிந்து வருகிறது.

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மோஷன், ஏற்கனவே இஸ்மாயில் ஹனியாவும் கொல்லப்பட்டார்.

ஹமாஸ் இராணுவத் தலைவர் முகமது டெய்பை வீழ்த்தினோம். ஈரான் தனது சொந்த மக்கள் மீதும், அண்டை நாடுகளான ஈராக், சிரியா, லெபனான், ஏமன் மக்கள் மீது செலுத்தும் பயங்கரவாதத்தின் படியும் முழுமையாக விரைவில் முடிவுக்கு வரும்.

ஈரான் தலைமையிலான தீவிரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வந்து மாறுபட்ட      எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதன் மூலம் இந்தப் போரில் மிக முக்கிய இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம்.

மிகப் பெரிய யூத இனப் படுகொலைக்குப் பின்னர் எங்கள் மக்களின் மீது மோசமாக தாக்குதலை நடத்தியவரின் கணக்கைத் தீர்த்துள்ளோம்.

இருப்பினும் ஹமாஸ் மற்றும் ஈரான் ஏவிவிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் போர் இன்னும் முடிவடையவில்லை.

கடினமான நாட்கள் இன்னும் இருக்கின்றன. இறுதியில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.



அண்மைய பதிவுகள்