பாகிஸ்தான் நாட்டுக்கு இலங்கை கண் தானம்

5 months ago


இலங்கை இருபத்தாறாயிரத்து215 கண்களை பாகிஸ்தானுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

ஜனாதிபதி நிதிய நிதியுதவியுடன் இலங்கைத் தூதுவர் ரவி விஜேதுங்க, ராவல்பிண்டி இரா ணுவ கண் மருத்துவமனையில் இம்மாதம் 12ம் திகதி இந்தக் கண்களை அன்பளிப்புச் செய்துள் ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது கண்களை இழந்த இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்தக் கண்கள் பொருத்தப்படவுள்ளன.

மேற்படி அன்பளிப்பு வைபவத்தில் உரையாற்றிய இலங்கைத் தூதுவர் புலிகளுக்கு எதிரான போரின்போது பாகிஸ்தான் நிபந்தனையற்ற இராணுவத் தளவாடங்களையும் பயிற்சிகளையும் இலங்கை இராணுவத்துக்கு வழங்கியமைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.