இஸ்ரேலில் பலஸ்தீனர்களுக்கு பதிலாக 16, 000 இந்தியர்களுக்கு கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பு

1 week ago



இஸ்ரேலில் பலஸ்தீனர்களுக்குப் பதிலாக 16 ஆயிரம் இந்தியர்களுக்கு கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலின் தொடர்ச்சியாக, இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர்களுக்கு அந்த நாட்டு அரசு தடைவிதித்தது.

அவர்களுக்குப் பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணியாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் மும்முரமாக ஈடுபட்டது.

இதன் விளைவாக தற்போது இஸ்ரேலில் கட்டுமான துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு 16,000 தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்கு சென்றுள்ளனர்.

அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு இலவச உணவு, தங்குமிடம் தவிர ஒன்றரை இலட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

பாதுகாப்புக்கும் முழு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.