வதிவிடப் பாடசாலைகளின் இருப் பிடத்தைக் குறிக்கும் புதிய இணைய வரைபடத்தை கனடிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறுவனங்களுக்குச் செல்ல கட்டா யப்படுத்தப்பட்ட குழந்தைகளின் குறிக்கப்படாத அல்லது மறக்கப்பட்ட கல்லறைகளைத் தேட இது உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
1830களில் கனடாவில் முதன் முதலில் திறக்கப்பட்ட வதிவிடப் பாடசாலைகள் 1990களின் நடுப்பகுதி யில் மூடப்பட்டது முதல் பல வதிவிடப் பாடசாலைக் கட்டடங்கள் இடிக்கப் பட்டன. நடைபாதை அல்லது கட்டு மானங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வதிவிடப் பாடசாலைகளின் வரைபடம் தேடுபவர்களுக்கு முந்தை ய கட்டடங்களின் துல்லியமான இருப் பிடங்களைப் பெற இந்தப் புதிய வரை படம் உதவும்.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் மானுடவியல் பேராசிரியரான ஆண்ட்ரூ மார்டின்டேல், 'இது மிகவும் மதிப்புமிக்க ஆதாரம்' எனத் தெரிவித்துள்ளார்.
'ஒரு கல்லறை அல்லது புதைக்கப் பட்டதற்கான ஆதாரங்களை நாங் கள் கண்டறிந்தால், 1930 களில் கட்டடங்களுடன் ஒப்பிடும்போது அது எங்குள்ளது என்பது எங்களுக்குத் தெரிந்தால், 'இது இன்று எங்கே இருக்கிறது?" என்று கூறுவதற்கு இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்தலாம்' என அவர் மேலும் கூறியுள்ளார்.