இந்தியா கேரளா- நெடும்பசேரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கிய 15 வெளிநாட்டவர்கள் தலைமறைவு.

1 month ago



இந்தியாவின் கேரளா- நெடும்பசேரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட 15 வெளிநாட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலி பயண ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர்.

இவர்கள் 2001 முதல் 2005 வரையான காலப்பகுதியில் கைது செய்யயப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தலைமறைவானவர்களில் இலங்கை, நேபாளம், பிரான்ஸ், ஈரான் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

சுரங்கா பிரதீப்,47, அனுராதபுரம், இலங்கை, நீல், 42, வடமராச்சி, இலங்கை, நாராயண முதியன்சலகே நிஹால், 58, புத்தளம், இலங்கை, டபாகே ஸ்ரீமாலிகா மெலமி பெர்னாண்டோ, 44, புத்தளம், இலங்கை, டோர்ஜி, 61, நேபாளம், மனோகரன், 62, யாழ்ப்பாணம், இலங்கை, சிவராமகிருஸ்ணன், 40, முல்லைத்தீவு, இலங்கை, மங்காயத் கராபி, 56, யாழ்ப்பாணம், இலங்கை, சந்திரலிங்கம் நடராஜ், 68, எடவேர்ட் வாலியன்ட், பிரான்ஸ், தம்பிராஜ் யோகேந்திரம், 58, யாழ்ப்பாணம், இலங்கை, அம்மிமொல்லா பாபகானி, 46, ஈரான், . பன்டேலீவா டாடியானா பொரிஸோவ்னாஇ 42, ரஸ்யா, பிரேமானந்தி, 40, முல்லைத்தீவு, இலங்கை, கவிதா, 45, வடமராட்சி, இலங்கை, துசாரா தமயந்தி, 44, புத்தளம், இலங்கை, இவர்கள் செங்கமாநாடு பொலிஸ் நிலையத்தில் கடவுச்சீட்டு; சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், இந்த வெளிநாட்டினர் மீதான விசாரணை எர்ணாகுளம் குற்றப்பிரிவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும். தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், இவர்களை குற்றப்பிரிவு பொலிஸார் தேடி வருகின்றனர்.

இவர்களை பற்றிய எந்தத் தகவலும் முறையே 0484-2551158 மற்றும் 9497987292 என்ற எண்களில் எஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் குற்றப் பிரிவுக்கு அனுப்பப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.