மாவீரர் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி நினைவுகூர விடவும்.-- சி.வேந்தன் தெரிவிப்பு
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நாள் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ள ஏதுவாக மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி உறவுகள் நினைவுகூர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி அநுரகுமார உறுதியாக கூறினார்.
நல்லிணக்கத்தின் முதலாவது நிகழ்வாக மாவீரர் நாள் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.
மாவீரர் துயிலும் இல்ல காணிகளிலிருந்தும் இராணுவத்தை வெளியேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.