யாழ்.சங்கானையில் சர்வதேச கலை பரிமாற்று நிகழ்வு என்ற கருப்பொருளில் பயிற்சி கலைநிகழ்வு

2 months ago


யாழ்.சங்கானையில் சர்வதேச கலை பரிமாற்று நிகழ்வு என்ற கருப்பொருளில் பயிற்சி கலைநிகழ்வு

காவேரி கலா மன்றம், கற்பகம் இயற்கை நேய செயலணி இளையோர் நாடகக் குழு என்பன இணைந்து இரண்டு நாள் பயிற்சி செயலமர்வை கடந்த 11, 12 ஆகிய திகதிகளில் சங்கானை பொது நூலகத்தில் நடத்தினர்.

இதன் இறுதி அரங்கேற்றத்தை நேற்று முன்தினம் சுழிபுரம் பெரிய புலோ அண்ணா கலையரங்கில் நிகழ்த்தினர்.

இதன்போது பறை இசை ஆட்டம், நாட்டார் பாடல்கள், உடன் நாடக அரங்கு என்பன நிகழ்த்தி மக்களை மகிழ்வூட்டினர்.

குறிப்பாக உடன் நாடக அரங்கினை நடித்தோர் பார்வையாளர்களின் பாராட்டினை பெற்றனர்.

சர்வதேச கலை பரிமாற்று நிகழ்வு என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த கலைநிகழ்வை, தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்கள் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது. 


அண்மைய பதிவுகள்