முல்லைத்தீவில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
2 months ago
முல்லைத்தீவில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - முத்துவிநாயகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த காசிலிங்கம் தங்கதீபன் (வயது 45) என்பவரே உயிரிழந்தார்.
யானைகள் நுழையாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்தார்.
இந்த மின்வேலி சட்டரீதியாக அமைக்கப்பட்டதா என்பது தெரிய வரவில்லை.
உயிரிழந்தவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சுவரொட்டிகளை ஒட் டிய போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.