கனடாவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்கள் ஆலோசிக்கப்படுகிறது.


கனடாவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில் அமைச்சர் அமைச்சர் Randy Boissonnault முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை புதிய விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை தவிர்க்க தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை பயன்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடிய மக்கள் தொகையில் 6.8 சதவீதமாக உள்ளனர் என அண்மைய மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பிடுகிறது.
கனடாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. எனினும் அதனை பலர் மோசடியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
