"பெண்களின் தலைமைத்துவத்தை அரசியலில் மேம்படுத்துவோம்" யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம்
2 months ago
"பெண்களின் தலைமைத்துவத்தை அரசியலில் மேம்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் மன்னார் மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
இந்த நாடக ஆற்றுகை இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு சந்தியில் முற்பகல் 10 மணிக்கு முதலாவது நாடகத் தையும், இரண்டாவது நாடகத்தை மாஞ்சோலை சந்தியிலும் நடைபெறும்.
நாளை மறுதினம் புதன்கிழமை கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பிற்பகலில் நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து 7ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் நகர பகுதி பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது.