கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா பணிகளுக்கு செலவிட 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் கடற்படையினருக்கு வழங்கல்

1 month ago



கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஒழுங்கமைப்பு பணிகளுக்கு செலவிடுவதற்காக 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா வரும் 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் உட்பட 9 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள வருவோருக்கான உணவு, குடிதண்ணீர் வசதிகள், மலசலகூட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் அரச அதிகாரிகள், பெருவிழாவுக்கான ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான போக்குவரத்து, தங்குமிட வசதிகளை வழங்கவும் என கடற்படையிடம் 3.2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்தன.



அண்மைய பதிவுகள்